தென்னிந்திய சினிமாபாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

ரூ. 400 கோடி பட்ஜெட்டில் ராஜமௌலியின் அடுத்த பிரம்மாண்ட படம்- ஆலியா பட் வேறு யாரெல்லாம் பாருங்க

எஸ்.எஸ். ராஜமௌலி என்றாலே நமக்கு முதலில் நியாபகம் வருவது பிரம்மாண்ட படமான பாகுபலி தான். அப்படத்திற்கு பிறகு எப்படிபட்ட படம் இயக்குவார் என்று ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்தார்கள்.

அந்த நேரத்தில் தான் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆரை வைத்து படம் இயக்கப்போவதாக தகவல் வந்தது. இன்று படம் குறித்து ராஜமௌலி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அதில்,சுதந்திரதுக்கு முன் நடந்த இரண்டு நிஜ ஹீரோக்களை பற்றிய கதை, 2 வருடங்களாக படத்திற்காக நிறைய ஆராய்ச்சி நடந்து வருகிறது.

இதில் அஜய் தேவ்கன், ஆலியா பட், Daisy Edgar Jones ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் என நான்கு மொழிகளிலும் தயாராகும் இப்படம் ரூ. 400 பட்ஜெட்டில் உருவாகிறது. ஜுலை 30, 2020ல் வெளியாக இருக்கும் இப்படம் 10 இந்திய மொழிகளிலும் வெளியாக இருப்பதாக கூறியுள்ளார்.

Related Articles

Close