கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

ரஜினி நடிக்கும் பேட்ட படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியீடு

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படம் பொங்கல் தினத்தன்று வெளியாகவிருக்கும் நிலையில், பேட்ட படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழை படக்குழு வெளியிட்டுள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்தில் ரஜினிகாந்துடன் விஜய்சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், நடிகைகள் சிம்ரன், திரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்
சமீபத்தில் வெளியாகிய பாடல் மற்றும் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படத்தின் டிரைலர் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நாட்டையே உலுக்கும் ஆணவ கொலைகளை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. #Petta #Rajinikanth

Related Articles

Close