சின்னத்திரைலேட்டஸ்ட்

மேடையில் லவ் ப்ரோபோசல்.. முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரால் வந்த சர்ச்சை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பல பிரபலங்கள் காதலில் விழுந்து உருகி உருகி காதலித்த காட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம்.
ஆனால் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்கள் மைசூரில் நடந்த தசரா விழா மேடையில் தங்கள் காதலை ப்ரோபோஸ் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சந்தன் ஷெட்டி மற்றும் நிவேதிதா கவுடா ஆகியோர் தான் இப்படி சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

சந்தன் ஷெட்டி காதலை சொல்ல மக்கள் ஆரவாரம் செய்த்தனர். அதை நிவேதிதா கவுடா ஏற்றுக்கொண்டுள்ளார்.
அரசு நடத்திய விழா மேடையில் இப்படி இவர்கள் செய்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வி.சோமண்ணா தெரிவித்துள்ளார்.

Related Articles

Close