தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த பிரபல காமெடி நடிகர்! நடிப்பு என வேடிக்கை பார்த்த மக்கள்

இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல நகைச்சுவை கலைஞர் மஞ்சுநாத் நாயுடு. வயது 36. துபாயில் பல ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி வந்த இவரை அவரது ரசிகர்கள் மேங்கோ என்று செல்லமாக அழைப்பர்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிகிழமை துபாயில் நடந்த காமெடி கலைஞர்களுக்கான நகைச்சுவை நிகழ்ச்சியில் மஞ்சுநாத் கலந்து கொண்டார்.இறுதியாக மேடையில் பெர்பார்மன்ஸ் செய்த அவர், மறைந்த தனது பெற்றோரின் கதைகளை கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார்.

தொடர்ந்து கவலையால் ஏற்படும் மனஅழுத்தம் பற்றி பாவனையுடன் நகைச்சுவையாக பேசிய அவர், திடீரென மேடையிலிருந்த இருக்கையில் அமர்ந்து மயங்கி சரிந்தார்.இதனை பார்த்த பார்வையாளர்கள், இது நகைச்சுவையின் ஒரு பகுதி என நினைத்தனர்.

ஆனால் வெகுநேரமாகியும் எழுந்திருக்காததால் அவரது நண்பர் ஒருவர் மஞ்சுநாத்தை எழுப்பியபோது, அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

முதலில் மஞ்சுநாத் எப்படி இறந்தார் என தெரியாத நிலையில் பின்னர் அவர் மாரடைப்பால் உயிரிழந்தது உறுதியாகியுள்ளது.Related Articles

Close