லேட்டஸ்ட்ஹாலிவுட் சினிமா

மூளை காய்ச்சலால் தூக்கத்திலேயே மரணமடைந்த 20வயது பிரபல நடிகர்! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்

டிஸ்னி டிவி தொடர்களில் நடித்ததன் மூலம் அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமானவர் நடிகர் கேமரூன் பாய்ஸ். இவருக்கு வயது 20.குழந்தைகளை கவர்ந்த நடிகராக வலம் வந்த கேமரூன், சமீபத்தில் மூளையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று தூக்கத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக அவரது செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

ட்விட்டரில் தற்போது வரை 13 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பாளர்களை கொண்டுள்ள கேம்ரூன் பாய்ஸ் இளம் வயதிலேயே மரணமடைந்த செய்தியறிந்து திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இதுகுறித்து டிஸ்னி தரப்பில், இளம் வயதிலிருந்தே அவரது கனவு என்னவென்றால் தனது திறமையை இந்த உலகத்துக்கு காட்ட வேண்டும் என்பதுதான் என கூறப்பட்டுள்ளது.

Related Articles

Close