கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

முதன்முறையாக பாகுபலி நடிகருக்கு ஜோடியாகும் சாய் பல்லவி! முழு விபரம் இதோ

தமிழ் நடிகையான சாய் பல்லவி, ப்ரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.

இப்படத்தின் பிரமாண்ட வெற்றியினால் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இருந்து பட வாய்ப்புகள் தேடி வந்தன. தனுஷின் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகியிருந்த மாரி-2 படத்திலும் இவர் நடித்திருந்தார்.

இந்நிலையில் முதன்முறையாக தெலுங்கின் முன்னணி நடிகர் ராணா டகுபதிக்கு ஜோடியாக புதியதொரு படத்தில் சாய் பல்லவி நடிக்கவுள்ளார். விரட்ட பர்வம் 1992 என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் தொடக்கக்கட்ட பூஜை சமீபத்தில் நடைபெற்றது.

அரசியலை மையக்கருத்தாக கொண்டு உருவாகும் இப்படத்தில் ஏழை விவசாயின் மகளாக சாய் பல்லவி நடித்து வருகிறார்.

Related Articles

Close