சின்னத்திரைலேட்டஸ்ட்

முதன்முறையாக தொலைக்காட்சிக்கு வரும் யுவன்ஷங்கர்ராஜா! எந்த நிகழ்ச்சிக்கு தெரியுமா

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மியூசிக் ரியாலிட்டி ஷோ சரிகமப. இந்த நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சரிகமப நிகழ்ச்சியின் நடுவர்களாக பாடர் ஸ்ரீனிவாஸ் மற்றும் பாடகி சுஜாதா ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சரிகமப சீனியர்ஸ் சீசன்-2 நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ளது. இதுகுறித்து அத்தொலைக்காட்சியின் தொகுப்பாளினி அர்ச்சனா கூறுகையில், சரிகமப நிகழ்ச்சி ராக்ஸ்டார் ரமணியம்மா என நிறைய பாடகர்களை உருவாக்கியுள்ளது.

இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இதிலும் நடுவர்களாக ஸ்ரீனிவாஸ் மற்றும் சுஜாதா இருப்பர். அவர்களுடன் 100 பேர் கொண்ட ஜூரி டீம் ஒன்றும் இருக்கும். இவை அனைத்துக்கும் மேலாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சரிகமப நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இந்நிகழ்ச்சியின் தூதராக அவர் செயல்படுவார் என்றார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் முழுநேரமும் யுவன் பங்கேற்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Close