கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

மீண்டும் வருகிறார் மந்த்ரா

தமிழ் சினிமாவில் 1996ல் வெளிவந்த ‘ப்ரியம்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மந்த்ரா. அதன் பின் விஜய்யுடன் ‘லவ் டுடே’, அஜித்துடன் ‘ரெட்டை ஜடை வயசு’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இருந்தாலும் தெலுங்கில் ஒரு பரபரப்பான ஹீரோயினாக 90களின் கடைசியில் இருந்தார்.

உதவி இயக்குனர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு நடிப்பை விட்டு விலகியிருந்தார். மீண்டும் தமிழில் ‘ஒன்பதுல குரு, வாலு, கவலை வேண்டாம்’ ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார்.

தற்போது ஒரு யு டியுப் சேனலை ஆரம்பித்து அதில் நிகழ்ச்சிகளைத் தருவதில் பிஸியாக இருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் இரண்டு பெரிய தெலுங்குப் படங்களில் நடிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். முன்பைவிட உடல் இளைத்து ஸ்லிம் ஆகவே இருக்கிறார்.
தெலுங்கில் குடும்பப் பாங்கான படங்கள் அதிகம் வரும். அக்கா, அண்ணி, சித்தி, அம்மா கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக அவை இருக்கும். அதனால் மந்த்ரா மீண்டும் பிஸியாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கலாம்.

Related Articles

Close