சின்னத்திரைலேட்டஸ்ட்

மீண்டும் நடிக்க வந்தார் மமதி சாரி

ஒரு காலத்தில் சின்னத்திரையில் நட்சத்திர தொகுப்பாளினியாக இருந்தவர் மமதி சாரி. அவர் நடத்திய ஹலோ தமிழா நிகழ்ச்சி இன்றைக்கும் பேசப்படுகிற ஒரு நிகழ்ச்சி. எல்லா முன்னணி சேனல்களிலும் டாக் ஷோ நடத்தினார். அதன்பிறகு வாணி ராணி தொடரில் நடித்தார். பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். சினிமாவில் அல்ல வெப் தொடரில். கவிதாலயா தயாரிக்கும் டைம் என்ன பாஸ் தொடரில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதில் அவருடன் ரோபோ சங்கர், பாரத் நிவாஸ், பிரியா பவானிஷங்கர், அலெக்சாண்டர் பாபு, சஞ்சனா சரதி, கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். சினிமாவிலும் நடிக்கும் திட்டத்தில் இருக்கிறார் மமதி சாரி.
Related Articles

Close