கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

மிஸ்டர்.லோக்கல் தள்ளி சென்றது, அஜித்தின் பிறந்தநாளில் வெளியாகவுள்ள படம் எது தெரியுமா?

தல அஜித்தின் பிறந்தநாளான மே-1ல் அஜித்தின் நடிப்பில் உருவாகி வருகின்ற இந்தியின் பிங்க் ரீமேக் வெளியாகும் என்று முதலில் அனைவராலும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாததால் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு நேர் கொண்ட பார்வை படம் தள்ளி சென்றுள்ளது.

மேலும் நேர் கொண்ட பார்வையுடன் மே-1ஆம் தேதி மோதவுள்ளதாக கூறப்பட்ட சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் படமும் மே-17ஆம் தேதி தான் ரிலீஸ் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இதனால் மே-1 அஜித் பிறந்தநாளில் எந்த படமும் வெளியாகாதா என ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருந்த நேரத்தில் கௌதம் கார்த்தியின் நடிப்பில் உருவாகி ரெடியாகவுள்ள தேவராட்டம் படம் வருகிற 1ஆம் தேதி வெளியாகும் என்று படத்தை தயாரித்துள்ள ஸ்டுடீயோ க்ரீன் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மிஸ்டர்.லோக்கல் படத்தை தயாரித்ததும் ஸ்டுடீயோ க்ரீன் நிறுவனம் தான் என்பது கூடுதல் தகவல்.

Related Articles

Close