கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

மாற்றி மாற்றி பேசும் ஐஸ்வர்யா ராஜேஷ் ; மீண்டும் ஒரு சர்ச்சை

சமீபத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக திரையுலகை சேர்ந்த சிலர், ‘இந்தி தெரியாது போடா’ என்கிற வாசகம் கொண்ட டி-சர்ட் அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.. அப்படி எதிர்ப்பு தெரிவித்தவர்களில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டும் நெட்டிசன்களின் கருத்து தாக்குதலுக்கு ஆளானார். காரணம் அவர் ‘டாடி’ என்கிற ஒரு இந்திப்படத்தில் நடித்திருக்கிறார். அந்தபடத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இந்தியிலேயே பேசியும் இருந்தார். அப்படிப்பட்டவர், தான் பணம் சம்பாதிக்க இந்தியை பயன்படுத்திக்கொண்டு, மற்றவருக்கு ஹிந்தி கற்கும் வாய்ப்பு கிடைத்துவிட கூடாது என எதிர்ப்பு தெரிவித்து இரட்டை வேடம் போட்டதாலேயே அவருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

இந்தநிலையில் மீண்டும் இன்னொரு இரட்டை வேட சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதாவது காக்கா முட்டை படம் வெளியான சமயத்தில் அதில் நடித்த அனுபவம் குறித்து, ஒரு பிரபல இணையதளத்தில் பகிர்ந்துகொண்டபோது, “சேரி பகுதி என்றாலே என்னவென்று தெரியாது.. அது எனக்கு புதிதாக இருந்தது” என்று கூறினார்..
ஆனால் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியில் தன்னம்பிக்கை தரும் விதமாக பேசிய அவர், தனது வாழ்க்கை பயணம் குறித்து பகிர்ந்துகொண்டபோது, “நான் சேரி பகுதியில் பிறந்தவள்.. நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவள்” என குறிப்பிட்டு பேசியிருந்தார். இந்த இரண்டு வீடியோக்களும் யாரோ ஒரு நெட்டிசன் கண்ணில் பட்டுவிட, அதை அவர் சோஷியல் மீடியாவில் இணைத்து பதிவிட, தற்போது மீண்டும் ஒருமுறை ஐஸ்வர்யா ராஜேஷ் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

அவரது இரண்டு வீடியோக்களையும் கவனித்து பார்க்கும்போது, சினிமா வாய்ப்பு கிடைத்து வளரும் சமயத்தில் தன்னை சேரிப்பகுதியை சேர்ந்தவராக கூறிக்கொள்ள அவர் சங்கடப்பட்டிருக்கலாம் என்பதும், இப்போது வளர்ந்து பிரபலமாகி விட்டதால், சேரிப்பகுதியில் வளர்ந்தவள் என கூறுவதை பெருமையாக நினைத்துள்ளார் என்பதும் நன்றாகவே தெரிகிறது. ஆனால் இதுபோன்று மாற்றி மாற்றி பேசுவது அரசியல்வாதிகளுக்கே உள்ள குணம், ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அது அழகல்ல என நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகிறார்கள்.

Related Articles

Close