கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

மாறா ரீமேக் படம் அல்ல : இயக்குனர் விளக்கம்

தமிழில் தற்போது மாதவன், ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாறா. விக்ரம் வேதா படத்தை தொடர்ந்து மீண்டும் இந்த படத்தில் இவர்கள் ஜோடி சேர்ந்துள்ளனர். இந்த படம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் துல்கர் சல்மான் மற்றும் பார்வதி நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான சார்லி படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் திலீப் குமார் என்பவர் இயக்கியுள்ளார்.

இந்த படம் குறித்து திலீப்குமார் கூறும்போது, “மாறா படத்தை ரீமேக் என சொல்ல முடியாது.. அந்த படத்தின் தழுவல் என்று வேண்டுமானால் சொல்லலாம்.. இந்த படத்தை ரீமேக் செய்யலாம் என முடிவுசெய்த போதே, மாதவனுக்கும் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு அப்படியே ரீமேக்காக உருவாக்குவதில் உடன்பாடு இல்லை.. இதை ஆரம்பத்திலேயே அவர்கள் தெளிவாக சொல்லிவிட்டதால், அந்த படத்தின் முக்கியமான ஒன்லைன் கருவை மட்டும் எடுத்துக் கொண்டு அப்படியே திரைக்கதையை மாற்றி புதிய படமாகவே உருவாக்கியுள்ளோம் என்றார்.




Related Articles

Close