தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

பெற்ற மகளை அசிங்கமாக திட்டி அடித்து துன்புறுத்திய பிரபல நடிகர்- மருத்துவமனையில் பரிதாப நிலையில் பெண்

பெற்ற மகளையே பிரபல நடிகர் துனியா விஜய் அடித்து துன்புறுத்திய விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னட நடிகர் துனியா விஜய்க்கு நாகரத்னா என்பவர் முதல் மனைவி, இவர்களுக்கு 2 பெண்ணும், 1 மகனும் இருக்கின்றனர்.

பின் சில பிரச்சனையால் விஜய் அவரை விவாகரத்து செய்துவிட்டு கடந்த 2016ம் ஆண்டு கீர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.


இந்த நிலையில் நாகரத்னாவின் மகள் மோனிகா துனியா விஜய்யின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மோனிகாவை இரண்டாவது மனைவி மற்றும் அவரது நண்பர்கள் மோசமாக திட்டியுள்ளனர்.


அதோடு விஜய் தனது மகள் மோனிகாவை அடித்து துன்புறுத்தியுள்ளாராம். அவர் அடித்ததில் காயம் அடைந்த மோனிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அதோடு தன் அப்பா மீதும் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

Related Articles

Close