பாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

பெண் தயாரிப்பாளருக்கு தொல்லை! மாதக்கணக்கில் பின்தொடர்ந்த இளைஞரை கைது செய்த போலீசார்

பாலிவுட் சினிமா மற்றும் சீரியல்களை தயாரித்துவருபவர் ஏக்தா கபூர். அவரை 32 வயது நபர் ஒருவர் மாதக்கணக்கில் பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

நேற்று மும்பை ஜூஹூ பகுதியில் ஒரு கோவிலுக்கு ஏக்தா கபூர் சென்றுள்ளார். அந்த இடத்திற்கு வந்த Sudhir Rajender Singh என்ற நபர் அவரிடம் பேச முயன்றுள்ளார். அப்போது பாதுகாவலர்கள் தடுத்த போதும் சண்டையில் இறங்கியுள்ளார்.

இதுபோல பல மாதங்களாக ஏக்தா கபூர் செல்லும் இடங்களுக்கெல்லாம் சென்று தொல்லை கொடுத்து வந்துள்ளார். இனியும் பொறுக்க முடியாது என போலீசில் புகார் அளித்துள்ளனர்.

அந்த நபரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது செல்போனையும் அலசி வருகின்றனர். ஏக்தா கபூர் செல்லும் இடங்கள் எப்படி இவருக்கு தெரிகிறது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

Close