தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

பிறந்த நாளில் கீர்த்திசுரேஷூக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு!

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்றும் அவருக்கு தென்னிந்திய திரையுலகினர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் கீர்த்திசுரேஷுக்கு இன்று பிறந்தநாளை அடுத்து அவருக்கு தெலுங்கு சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தற்போது நடித்து வரும் படம் ’Sarkaru Vaari Paata’. இந்த படத்தை பரசுராம் என்பவர் இயக்கி வருகிறார் என்பதும், இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மகேஷ் பாபுவுடன் முதன்முதலாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு இது உண்மையிலேயே ஒரு ஜாக்பாட் வாய்ப்பு என்று தான் கூற வேண்டும்.

தமிழில் விஜய், சூர்யா, விக்ரம், உள்பட மாஸ் நடிகர்களுடன் நடித்து விட்ட கீர்த்தி சுரேஷ் தற்போது தெலுங்கிலும் மாஸ் நடிகருடன் இணைந்து உள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Related Articles

Close