கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

பிரியா பவானி சங்கரைத் தொடர்ந்து ஹீரோயினாகும் மற்றொரு செய்தி வாசிப்பாளர்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று பிரபலம் ஆனவர்கள் ஏராளம். சிவகார்த்திக்கேயன், சந்தானம், பிரியா பவானி சங்கர், வாணி போஜன் என இந்தப் பட்டியல் நீளமானது. தற்போது இந்தப் பட்டியலில் செய்தி வாசிப்பாளர் திவ்யா துரைசாமியும் இணைந்துள்ளார்.

இளம் செய்திவாளிப்பாளரான இவர் சமூகவலைதளப் பக்கத்தில் தொடர்ந்து தனது விதவிதமான புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்து வருவதால், ஏற்கனவே ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளார். இதனாலேயே அவருக்கு வெள்ளித்திரை வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது.

ஏற்கனவே இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் மகாபா ஆனந்துக்கு ஜோடியாக சிறிய கதாபாத்திரத்தில் திவ்யா நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் சிறிய ரோலில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் ஜெய் மற்றும் பாரதிராஜா ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு முடிவடைந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.
Related Articles

Close