பாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

பிரபல நடிகை தீபிகா ரன்வீரின் திருமணம் ஏற்றுக்கொள்ளப்படாது! கடும் எதிர்ப்பு – புது சர்ச்சை

பாலிவுட் சினிமாவின் பிரபலங்கள் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே. காதலித்து வந்த இவர்கள் வெளிநாட்டில் திருமணம் செய்துகொண்டார்கள். இருவரின் பூர்வீக முறைப்படி தனித்தனியாக ஆடம்பரமாக இவர்கள் திருமணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பெங்களூர், மும்பையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

தீபிகா பெங்களூரை சேர்ந்த கொங்கணி சமூகத்தை சேர்ந்தவர். ரன்வீர் பஞ்சாப் சீக்கிய சமூகத்தை சேர்ந்தவர். சீக்கிய மதப்படி குருத்துவாராவில் தான் திருமணம் நடைபெற வேண்டும். நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தக்கூடாது.

இதனால் சீக்கிய மத குரு சுக்தேவ் சிங் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து குருத்வாரா கமிட்டியிடம் புகார் அளிக்கப்படும். 5 சீக்கிய குருமார்கள் சேர்ந்து இதில் முடிவு எடுப்பார்கள் என கூறியுள்ளார்.

Related Articles

Close