லேட்டஸ்ட்ஹாலிவுட் சினிமா

பிரபல நடிகர் வில் ஸ்மித்தா இது! ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படம்

ஹாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் வில் ஸ்மித். ஆவண படத்தில் நடிப்பதற்காக கடந்த வருடம் இந்தியாவிற்கு வந்தார். தற்போது அவர் தான் இணையதளத்தில் ஹாட்டான சென்சேஸன்.

தன் நண்பர்களுடன் ஆட்டோ ஓட்டும் புகைப்படம் சில நாட்களுக்கு முன் வந்தது. தற்போது வட இந்தியாவின் புனித தலமான ஹரித்வார் கோவிலில் பூஜை நடத்தியுள்ளார். அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகிவருகிறது.

இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வில் ஸ்மித், “கடவுள் அனுபவம் மூலமாக நமக்குப் பாடத்தை கற்றுக்கொடுப்பார் என்று எனது பாட்டி கூறுவார். இந்தியாவிற்குப் பயணம் செய்து அங்கு பெற்ற அனுபவம், மக்கள் மற்றும் இயற்கையான அழகு போன்றவை எனது கலை மற்றும் உண்மை பற்றிய புதிய புரிதலை ஏற்படுத்தியது” என்று கூறியுள்ளார்.

Related Articles

Close