பாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

பிரபல நடிகருக்கு ஏற்பட்ட எதிர்பாராத விபத்து! படுகாயத்தால் படக்குழு அதிர்ச்சி

 

இந்த வருடத்தின் தொடக்கத்தில் ஜனவரி மாதம் உலகளவில் வெளியாகி நல்ல விமர்சனங்களையும், வரவேற்பையும் பெற்ற படம் Uri: The Surgical Strike. ராணுவத்தை மையப்படுத்திய இக்கதையில் ஆக்‌ஷன் ஹீரோவாக நடிகர் விக்கி கௌசல் மிரட்டலாக நடித்திருந்தார். அவருக்கு பாராட்டுகள் குவிந்தன.

அவர் தற்போது இயக்குனர் பானு பிரதாப் சிங் இயக்கத்தில் ஹாரர் படத்தில் நடித்து வருகிறார். இதன் சண்டைகாட்சிகள் கப்பலில் இரவில் எடுக்கப்பட்டு வந்தது. இதற்கான படப்பிடிப்புகள் கடந்த 5 நாட்களாக குஜராத்தில் நடைபெற்று வந்தன. அதில் அவர் ஓடிப்போய் கதவை திறப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

அப்போது அவரின் மீது எதிர்பாராத விதமாக கதவு விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரின் கன்ன எலும்புகள் முறிந்துள்ளதோடு 13 தையல் போடப்பட்டுள்ளதாம். மும்பையில் சிகிச்சை எடுத்து வரும் அவர் குணமடைந்த பின் ஷூட்டிங் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Close