கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

பிங்க் ரீமேக் தொடர்ந்து, தல60ம் இந்த படத்தின் ரீமேக்கா?

நடிகர் அஜித் தற்போது பிங்க் படத்தின் ரீமேக்கில்தான் நடித்து வருகிறார். அதில் ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த ரோலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து அஜித் போனி கபூர் தயாரிப்பில் மற்றொரு படத்தில் நடிக்கவுள்ளார். அது மே மாதம் ஷூட்டிங் துவங்கி அடுத்த வருடம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம் பற்றி புதிய தகவல் பரவி வருகிறது.

Hepta: The Last Lecture என்கிற எகிப்திய படத்தின் ரீமேக் உரிமையை போனி கபூர் வாங்கியுள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. அதை தான் அஜித்தை வைத்து அவர் தமிழில் ரீமேக் செய்யவுள்ளார் என்று கூறப்படுகிறது.

Mohamed Sadek எழுதிய Hepta முழுக்க முழுக்க காதல் கதையான இதில் ஒரு காதலின் 7 நிலைகள் பற்றி காட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Close