சின்னத்திரைலேட்டஸ்ட்

பிக்பாஸ் 4 ஆரம்பித்துள்ள நேரத்தில் மீண்டும் விஜய் டிவியில் கவின், சாண்டி.. வெளியான புகைப்படம்..

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு ரசிகர்களால் பெரிதளவில் கொண்டாடப்பட்டவர்கள் ‘வி ஆர் தி பாய்ஸ்’ டீம்.

அதிலும் சாண்டி மற்றும் கவின் இருவருக்கும் தனியாகவே ரசிகர்கள் பட்டாளம் உண்டு. பிக்பாஸ் சீசன் 3 முடிந்த பிறகு பிக்பாஸ் கொண்டாட்டத்தில் தான் இருவரும் இணைந்தனர்.

ஆனால் அதற்கு பிறகு இருவரும் இணைந்து எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள வில்லை. இந்நிலையில் பிக்பாஸ் 4 புதிய சீசன் ஆரம்பித்துள்ள நேரத்தில், மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்கள் கவின் மற்றும் சாண்டி.

ஆம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் தான் இவருவரும் கலந்து கொண்டுள்ளனர். அதில் போட்டியாளராக இருக்கும் சிங்கர் ஸ்ரீனிவாஸ் கவின் மற்றும் சாண்டியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் சாண்டி தனது நண்பன் கவினுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ரசிகர்களுக்கு சப்ரைஸ் கொடுத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..
 

View this post on Instagram

 

Oooooo….Kavinaeeeee 😍 fun time after long time 🤙🏻🤩 @kavin.0431

A post shared by SANDY (@iamsandy_off) on

Related Articles

Close