சின்னத்திரைலேட்டஸ்ட்

பிக்பாஸ் வீட்டிற்குள் இந்த போட்டியாளரும் நுழைக்கிறாரா? செம்ம சாய்ஸ்

தமிழில் கடந்த மாதம் 23-ம் தேதி முதல் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த முறை வரும் 21-ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. இம்முறை நடிகர் நாகர்ஜுனா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களின் பெயர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், சிலரது பெயர்கள் தெலுங்கு ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ்-3 நிகழ்ச்சியில் திருமணம் எனும் நிக்காஹ் என்ற படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்த ஹெபா படேல் போட்டியாளராக கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருமணம் எனும் நிக்காஹ் படத்தைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்து வரும் ஹெபா படேலின் நடிப்பில் வெளியான 24 Kisses என்ற படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
Related Articles

Close