சின்னத்திரைலேட்டஸ்ட்

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இத்தனை கோடி சம்பளமா? தலையை சுற்ற வைக்கும் தகவல் இதோ

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் நேற்று துவங்கியுள்ளது. முதல் இரண்டு சீசன்களை போன்றே இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாஸன் தொகுத்து வழங்குகிறார். இது ஒருபுறம் இருக்க, இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 13வது சீசன் வரும் செப்டம்பர் மாதம் 29ம் தேதி துவங்க உள்ளது. பொதுவாக இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்குகிறது என்றால் போட்டியாளர்கள் யார் யார் என்பதைவிட இந்த சீசனில் சல்மான் கானுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப் போகிறார்களோ என்று தான் அதிகம் பேசுவார்கள்.இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் தொகுத்து வழங்க சல்மான் கானுக்கு வாரத்திற்கு ரூ.31 கோடி சம்பளம் என 26 எபிசோடுகளுக்கு மொத்தம் ரூபாய் 403 கோடி சம்பளம் பேசி முடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் பிக்பாஸை தொகுத்து வழங்கும் கமலுக்கு ரூபாய் 100 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே ஒரு தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.Related Articles

Close