Bigg Boss Tamil Season 3சின்னத்திரைலேட்டஸ்ட்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த காதல் ஜோடி இவர்களா? அட இது என்ன கொடுமை

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சிசன் 3 மூன்று வாரத்தை கடந்துவிட்டது. இந்நிகழ்ச்சியின் முக்கிய தினங்களே வார இறுதியான சனி, ஞாயிற்று கிழமைகள் தான். இந்நிலையில் இந்த வாரம் மோகன் வைத்யா வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் அப்படியே நடத்தப்பட்டு பின் பிராங்க் என கமல் கூறி அவர் நேற்று காப்பாற்றப்பட்டதாக அறிவித்தது பலருக்கு இன்ப அதிர்ச்சி தான்.



இது ஒரு பக்கம் இருக்க ஆரம்பத்தில் கவின் அபிராமி காதல் கதை போல ஓடியது. அதே வேளையில் சாக்‌ஷிக்கும் அவர் மீது ஒரு காதல் இருப்பது போல தெரிகிறது. ஆனால் கவினுக்கு லாஸ்லியா மீதே கண் இருந்து வருகிறது.

இந்நிலையில் மீரா தர்ஷனை காதலிப்பதாக புதியதாக ஒரு கதை கிளம்ப கமல்ஹாசன் காது வரை அது சென்றுள்ளது. அதற்கு இருவரும் மறுப்பு தெரிவிக்க இதற்கிடையில் கவினும் அவரிடம் மாட்டிக்கொள்கிறார். புதிய புரமோ இதோ



Tags

Related Articles

Close