சின்னத்திரைலேட்டஸ்ட்

பிக்பாஸ் சீசன் 4 களத்தில் இறங்கிய பிரபல காமெடியன்! அதிரடி எண்ட்ரி! களம் சூடுபிடிக்குமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 புரமோ வெளியானதிலிருந்து ரசிகர்கள் குஷியாகிவிட்டார்கள். போட்டியாளர்கள் குறித்து சில பெயர்கள் சமூகவலைதளத்தில் சுற்றி வருகின்றன.

இதற்கிடையில் சிலர் நான் இதில் கலந்துகொள்ளவில்லை என உடனே தகவலை பகிர்ந்துவிடுகிறார்கள். இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் சிசன் 4 தற்போது 2 வது எவிக்சனை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது.

முதல் எவிக்சனில் நடிகர் சூர்யா கிரண் வெளியேற்றப்பட்டார். கடந்த சில நாட்களாக நிகழ்ச்சி சூடுபிடிக்காததால் நிகழ்ச்சிக்குழு வேறு சிலரை ஒய்ல்டு கார்டு மூலம் உள்ளே கொண்டுவரலாம் என முடிவு செய்து நடிகர்கள், நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வந்தது.




இந்நிலையில் தற்போது Jabardasth என்ற காமெடி நிகழ்ச்சி பிரபலமான நடிகர் அவினாஷை உள்ளே இறக்கியுள்ளது. சூர்யா கிரண் வெளியேறியதை தொடர்ந்து காமெடி நடிகர் சாய் குமார் என்பரும் உள்ளே சென்ற நிலையில் அவினாஷ் இரண்டாம் நபராக சென்றுள்ளார்.

Related Articles

Close