Bigg Boss Tamil Season 3லேட்டஸ்ட்

பிக்பாஸில் இன்னும் 5,6 நாட்கள் தான் இருப்பேன்… உருக்கமாக பேசிய சாக்‌ஷி, ஆனால் கவினின் ரியாக்‌ஷன்

பிக்பாஸில் ஆரம்பத்தில் அபிராமி கவினை காதலிப்பதாக கூறியபோது கவினுக்கும் அபிராமிக்கும் நெருங்கிய தோழியாகவும் அவர்களது காதலுக்கு இடையே பாலமாகவும் இருந்தவர் சாக்‌ஷி.

ஆனால் அதன்பின் அவரும் கவினை விரும்ப தொடங்கிய பின் இருவருடனான நட்பும் சிதைந்தது. குறிப்பாக கவினுடன் சாக்‌ஷிக்கு பல பிரச்சனைகள் எழுந்தது. அதன்பின் இருவரும் மனம் விட்டு இன்று பேசினர்.



அப்போது சாக்‌ஷி, கடந்த சில தினங்களில் நடந்ததை நான் மறந்துவிடுகிறேன். முடிந்தது முடிந்துவிட்டது. நான் இந்த முறை நாமினேஷன் ஆகிவிட்டேன். இருக்கப்போகிறது 5 நாட்களோ 6 நாட்களோ, இதனால் நாம் வந்த போது எப்படி இருந்தமோ அப்படி இருப்போம். இந்த வார்த்தைகளை மனதில் வைத்துகொள் என உருக்கமாக கூறினார். ஆனால் கவினோ ஒன்றும் பேசாமலே இருந்தார்.



சாக்‌ஷி இந்த வார நாமினேஷன் ஆனவர்களில் இதுவரை குறைவான வாக்குக்களையே பெற்றுள்ளதால் அவரே எலிமினேட் ஆவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

Tags

Related Articles

Close