கோலிவுட் செய்திகள்திரைப்படம்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

பாபி சிம்ஹா நடிக்க தடை?

அக்னிதேவ் என்கிற படத்தில் நான் சில நாட்கள் மட்டுமே நடித்தேன். அதன் பிறகு சொன்ன கதைப்படி பத்ம எடுக்காததால் விலகிவிட்டேன். அதை தற்போது அக்னிதேவி என பெயர்மாற்றி நான் நடித்திருப்பது போல கிராபிக்ஸ் செய்து படம் வரும் 22ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர் என பாபி சிம்ஹா புகார் அளித்திருந்தார். இதனால் தற்போது அந்த படத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

படத்தின் பிரச்சனை பற்றி பேச தயாரிப்பாளர் சங்கம் பலமுறை அழைத்தும் பாபி சிம்ஹா வரவில்லையாம். நேற்று முன்தினம் கூட அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் அப்போதும் பாபி சிம்ஹா செல்லாததால் அவருக்கு ரெட் கார்டு போட தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

Related Articles

Close