கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் வெங்கட் பிரபு படம்

நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் வெங்கட் பிரபு படம்

ஷ்வேத் புரடெக்‌ஷன் ஹவுஸ் சார்பாக நித்தின் சத்யா தயாரிப்பில் வைபவ் நாயகனாக நடித்துள்ள படம் லாக்கப். அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். பிரபல இயக்குனரும் நடிகருமான வெங்கட்பிரபு முற்றிலும் மாறுபட்ட முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் மோகன்ராஜாவிடம் பணியாற்றிய எஸ்.ஜி.
சார்லஸ் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தில் ஈஸ்வரி ராவ், பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆரோல் கரோலி இசையமைத்துள்ள இப்படத்திற்கு, சந்தானம் சேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
வைபவ், வெங்கட் பிரபு
கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால், லாக்கப் படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளனர். அதன்படி இப்படம் ஜூலை மாதம் ஜீ5 தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஏற்கனவே பொன்மகள் வந்தாள், பெண்குயின் போன்ற படங்கள் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகின. அடுத்ததாக யோகிபாபுவின் காக்டெய்ல் வருகிற ஜூலை 10-ந் தேதியும், வரலட்சுமி சரத்குமாரின் டேனி திரைப்படம் ஆகஸ்ட் 1-ந் தேதியும் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Articles

Close