பாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

நடிக்க தெரியாது என கூறிய நெட்டிசன்- தக்க பதிலடி கொடுத்த டாப்ஸி

தென்னிந்திய மொழி படங்கள், பாலிவுட் என பிசியாக இருப்பவர் நடிகை டாப்ஸி. இவரது நடிப்பில் சமீபத்தில் தமிழில் கேம் ஓவர் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் டாப்ஸி தான் அடுத்ததாக நடிக்கவுள்ள படத்திற்கான தகவலை அப்படத்தின் இயக்குனர் அனுபவ் சின்ஹாவுடன் இணைந்து சாப்பிட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தார்.டாப்ஸியின் இந்த பதிவிற்கு கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவர், அனுபவ் சின்ஹா சார், நீங்கள் வேறு ஒரு நடிகையை நடிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். டாப்ஸிக்கு நடிக்கத் தெரியாது என கூற, உடனே டாப்ஸி கூலாக, சாரி, தற்போது அனைத்தும் கையெழுத்தாகிவிட்டது. அதனால் சாரால் என்னை படத்தை விட்டு நீக்க முடியாது. ஆனால் ஒரு வேலை செய்யுங்கள், அடுத்த முறை முயற்சி செய்யவும் இருப்பினும் அதிலும் நானே ஜெயிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

 Tags

Related Articles

Close