கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

நடிகை அனுஷ்காவிற்கு சைரா படப்பிடிப்பில் நடந்த சோகம்! கவலையில் படக்குழு

தெலுங்கில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகி வரும் சுதந்திர பின்னணி கொண்ட வரலாற்று படம் சைரா. சிரஞ்சீவி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அமிதாப் பச்சன், நயன்தாரா, விஜய் சேதுபதி, சுதீப், தமன்னா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

சுரேந்திர ரெட்டி இயக்கும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகை அனுஷ்காவும் நடிக்கிறார். அனுஷ்கா தொடர்பான காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் படப்பிடிப்பின்போது எதிர்பாராதவிதமாக அனுஷ்காவிற்கு கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டது.காயத்தை பரிசோதித்த மருத்துவர் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும் இரண்டு நாள் அவரை ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தி உள்ளார். இரண்டு நாட்களுக்கு பின் மீண்டும் படப்பிடிப்பை தொடர உள்ளார் அனுஷ்கா.Related Articles

Close