பாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

நடிகையிடம் தவறாக நடக்க முயன்ற நபர்.. உடையை குறை சொல்லும் நெட்டிசன்கள்

பிரபல பாலிவுட் நடிகர் சைப் அலி கானின் மகள் தான் சாரா அலி கான். இவர் தற்போது பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். இவர் தினம்தோறும் ஜிம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் இணையத்தில் அதிகம் வைரலாகும்.

இந்நிலையில் நேற்று சாரா Pilates கிளாசுக்கு சென்றுவிட்டு வெளியில் வந்தபோது அவரை காண ரசிகர்கள் பலர் இருந்தனர். சூழ்ந்துகொண்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். அப்போது திடீரென நபர் ஒருவர் சாராவின் கையில் முத்தம் கொடுக்க முயன்றுள்ளார். நடிகை சுதாரித்துக்கொண்டு கையை எடுத்துக்கொண்டார், அருகில் இருந்த பாதுகாவலர் அந்த நபரை துரத்தியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இதை பார்த்து ட்ரோல் செய்பவர்கள் சாராவின் ஆடையை குறை கூறி வருகின்றனர். ஜிம் உள்ளிட்ட இடங்களுக்கு வரும் போது மிக ஆபாசமாக சாரா உடை அணிந்து வருவதாக தெரிவித்து வருகின்றனர்.

Tags

Related Articles

Close