கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

நடிகர் கார்த்திக்கு 2வது குழந்தை

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி கடந்த 2011ஆம் ஆண்டு ரஞ்சனி என்பவரை திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு உமையாள் என்ற குழந்தை உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் ரஞ்சனி மீண்டும் கர்ப்பமானார். விரைவில் அவருக்கு குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன்னர் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை கார்த்தி தனது டுவிட்டர் தளத்தில் உறுதி செய்துள்ளார்

அனைவரின் ஆசியாலும் எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவம் பார்த்த மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரின் ஆசியும் குழந்தைக்கு கிடைக்கும் என நம்புகிறேன் என்று கார்த்தி தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

கார்த்தியின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பதும் கார்த்தி-ரஞ்சனி தம்பதிக்கும் அவர்களுடைய குழந்தைக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
Related Articles

Close