படம் எப்படிலேட்டஸ்ட்

தேவி 2 திரைவிமர்சனம்

பேய் படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெரும் என்ற நம்பிக்கை இருப்பது வழக்கமான ஒன்று தான். அதே வேளையில் அடுத்தடுத்த பாகங்களாக வெளிவந்து வெற்றி பெறுமா என்பது மக்களிடத்தில் தான் உள்ளது. அந்த வகையில் இயக்குனர் விஜய்யின் தேவி படத்தை தொடர்ந்து அடுத்த பாகமாக தேவி 2 படம் வெளியாகியுள்ளது.

கதை பற்றிய அலசல்

தேவி 1 ன் படி திருமணமான பிரபுதேவா தமன்னா ஜோடிக்கு கையில் குழந்தை இருக்கின்றது. வேலைக்காக இருவரும் ஜோடியாக மொரிஷியஸ் நாட்டுக்கு குடிபெயர்ந்து செல்கிறார்கள்.

வழக்கம் போல வாழ்க்கை செல்ல முந்தய பாகத்தில் ரூபியாக வந்து போன பேய் இன்னும் இருக்கிறதா என்ற சந்தேகம் பிரபுதேவாவுக்கு. ஆனால் நடப்பதோ வேறு.

பிரபுதேவா வேறொரு பெண்ணுடன் பழகுவதை கண்ட தமன்னா அதிர்ந்து போகிறார். நடப்பதையெல்லாம் பார்த்து ஒன்றும் புரியாமல் குழம்பி போயிருக்க கோவை சரளாவின் உதவியை நாடுகிறார்.

இதற்கிடையில் பிரபு தேவாவின் வாழ்க்கையில் இரண்டு பெயர்கள் நுழைகிறார்கள். அவர்களோடு இவர் பழகுவதால் உயிருக்கு ஆபத்து. இதற்கிடையில் சில அமானுஷ்யங்கள் நடைபெறுகின்றன.

பிரபு தேவாவுக்கு நடப்பது ஒன்றும் விளங்கவில்லை. அதே வேளையில் தமன்னா அந்த இருவரிடமிருந்து தன்னை தன் கணவரையும் பாதுக்காக்க போராடுகிறார்.

யார் அந்த இரண்டு பெண்கள், அவர்களின் பின்னணி என்ன, பிரபு தேவாவுக்கு அந்த பெண்களுக்கும் என்ன தொடர்பு, ஆபத்தில் இருந்து அவர் தப்பித்தாரா, தமன்னா ஆட்டிப்படைத்த அமானுஷ்யம் என்ன என்பதே கதை.

படத்தை பற்றிய அலசல்

தேவி படத்தின் முதல் பாகத்தை கொஞ்சம் மனதில் நினைவுபடுத்த வேண்டிய வேலையை படத்தில் எளிமையாகாட்டி தான் தேவி 2 க்குள் நம்மை அழைத்து செல்கிறார்கள்.

இயக்குனர் ஏ.எல்.விஜய் தேவி 1 படத்தில் நம்மை குஷியாக்கினார். தற்போது தேவி 2 படத்திற்காக ஸ்கிரிப்டில் கூடுதலாக ஒர்க்கவுட் செய்திருக்கிறார் என தெரிகிறது. வழக்கமான கதையாக தான் இருக்கும் என நினைத்தவர்களுக்கு எதிர்பாராத சர்ப்பிரைஸ் வைத்திருக்கிறார்.

பிரபுதேவாவை இந்த வயதில் அதே இளமை துள்ளலோடு இருக்கிறாரே என அவரை பார்க்கும் தோன்றலாம். 2 ரூபங்களில் கலக்கியிருக்கிறார். இரண்டிற்கும் கூலாக சேஞ்ச் ஓவர் காட்டியிருப்பது ஆச்சர்யம். நடனம் சொல்லவே வேண்டாம்.

தமன்னா பார்ட் 1 ல் கிளாமர் ஹீரோயினாக கலக்கினார். தற்போது தேவி 2 குடும்பத்து பெண்ணாக தன் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். பேய்யிடம் மாட்டிக்கொண்டு அவர் படும் பாடு நல்ல எண்டர்டெயின் மெண்ட்.

கோவை சரளாவுக்கு இங்கு என்ன வேலை என கேட்கலாம். பேய்யை டீல் பண்ணுவதில் அவருக்கு தான் முக்கிய பங்கு உண்டு. பேய்கே அக்ரீமெண்ட் போட்டு தமன்னாவும் இவரும் செய்யும் அட்டகாசங்கள் கவனத்தை கூடுதலாக்குகிறது.

பிரபு தேவாவின் நண்பராக வரும் ஆர்.ஜே.பாலாஜிக்கு சின்ன ரோல் தான். எந்த விசயத்தையும் பிளான் பண்ணி பண்ணனும் என தமன்னா, சரளா போகும் போது குறுக்கே வந்து ஒரு வழியாக்கிவிடுகிறார் பாலாஜி. மொத்த குடும்பமும் பைத்திய மாகிடுச்சோ என பாலாஜி படும் கஷ்டம் நல்ல காமெடி.

ஒளிப்பதிவாளர் போஸ் என்பவரின் இயல்பான படிப்பிடிப்பு, எடிட்டர் ஆண்டனியின் தெளிவான காட்சிகள் அமைப்பு, ஓவர் கிராஃபிக்ஸ் இல்லாமல் இயல்பாக கதையை கொண்டு சென்றது கதைக்கு கொஞ்சம் பிளஸ்.

அலட்டல் இல்லாத பாடல், போதுமான பின்னணி இசை என படம் எங்கேயும் சலிப்பு வராமல் கொண்டு போகிறது.

கிளாப்ஸ்

முதல் பாதியில் தொடங்கி கிளைமாக்ஸ் வரை இண்ட்ரஸ்டிங்கான கதை அமைப்பு.

பிரபு தேவா, தமன்னாவின் ரோல் பிளே ஸ்மார்ட்.

கோவை சரளாவின் காமெடி ஹார்ட் கோர்.

Related Articles

Close