கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

தேசிய விருது வரை பேசப்பட்ட நடிகை!! ஆனால் ஏற்பட்ட பரிதாப நிலை

யுத்தம் செய் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இனியா. ஆனால் விமல் நடிப்பில் வெளியான வாகை சூடவா படத்தின் மூலம் தான் இவர் பல வித்தினை தட்டி சென்றார். ஏன், வாகை சூடவா படத்திற்காக தேசிய விருதுகள் வரை கூட இவர் பெயர் அடிபட்டது.

இப்படத்திற்கு பின் மௌனகுரு, அம்மாவின் கைபேசி, கண்பேசும் வார்த்தைகள், சென்னையில் ஒரு நாள், நினைத்தது யாரோ, புலிவால், நான் சிகப்பு மனிதன், கோடிட்ட இடங்களை நிரப்புக, பொட்டு ஆகிய படங்களின் மூலம் ரசிகர் மனதில் இடம் பிடித்து விட்டார்.

ஆனால் இதன்பின் பெரிதும் வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் எந்த படத்திலும் இவர் நம்மால் பார்க்க முடியவில்லை. மேலும் தற்போது காபி எனும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிரபல முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் கண்ணே கலைமானே எனும் சீரியல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறாராம் நடிகை இனியா.

Related Articles

Close