தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய்யின் வாத்தி கம்மிங் பாடல்- பிரபலங்கள் போட்ட ஆட்டத்தை பார்த்தீர்களா?

விஜய்யின் படத்தில் கடைசியாக தயாராகி இருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தின் ரிலீஸ் எப்போது என்று தான் ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அண்மையில் இத்திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படம் கண்டிப்பாக திரையரங்கில் தான் வெளியாகும் என பேட்டி கொடுத்திருந்தார்.

படம் வெளியாகவில்லை ஆனால் படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி செம ஹிட். அதிலும் வாத்தி கம்மிங் பாடலுக்கு விஜய் இப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் நடனம் ஆட இன்னும் அப்பாடலுக்கு செம ரீச்.

தற்போது என்ன விஷயம் என்றால் இந்த வாத்தி கம்மிங் பாடலை தெலுங்கு பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டுள்ளனர். அதற்கு பிரபலங்கள் செம ஆட்டம் ஆடுகின்றனர்.

இதோ அந்த வீடியோ,
Related Articles

Close