கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

துருவ நட்சத்திரம் படத்தின் புதிய அப்டேட்

துருவ நட்சத்திரம் படத்தின் புதிய அப்டேட்

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் ‘துருவ நட்சத்திரம்’. பல்வேறு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், சில காரணங்களால் இப்படம் முழுமையடையாமல் இருக்கிறது. இந்த படத்தில் விக்ரமுடன், சிம்ரன், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.
விக்ரம்
இந்நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இந்த படத்தில் இடம் பெறும் பாடல் ஒன்று அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. தாமரை எழுதியுள்ள ஒரு மனம் என்ற அந்த பாடலை கார்த்திக் மற்றும் ஷாஷா திருப்பதி இணைந்து பாடியுள்ளனர். விரைவில் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Close