கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

திரையுலகில் அடுத்த அவதாரம் எடுத்த நமீதா! அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழ் திரையுலகில் சமீபத்தில் நடிகை வரலட்சுமி இயக்குனர் அவதாரம் எடுத்தார் என்பதும் ஒட்டுமொத்த திரையுலகமும் அவருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்தது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் வரலட்சுமியை அடுத்து தற்போது நமீதாவும் திரையுலகில் புதிய அவதாரம் எடுத்துள்ளார். இதுவரை நடிகையாக மட்டுமே இருந்த நமீதா தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்

நமீதாவின் முதல் தயாரிப்பு திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வரும் 26-ஆம் தேதி திருவனந்தபுரத்தில் காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. இந்த படத்தை ஆர்எல் ரவி மற்றும் மாத்யூ ஸ்கேரியா ஆகியோர் இணைந்து இயக்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
Related Articles

Close