கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

திருமணமா? பரவும் தகவல் பற்றி விஷால் அதிரடி பதில்

நடிகர் விஷாலுக்கு ஆந்திராவைச் சேர்ந்த அனிஷா என்கிற பெண்ணுடன் திருமணம் நடைபெறவுள்ளது என சமீபத்தில் தகவல் பரவியது. மேலும் அவர்கள் இருவருக்கும் விரைவில் நிச்சயதார்த்தம் ஆகவுள்ளது என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் நடிகர் விஷால் இதுபற்றி ட்விட்டரில் கோபமாக பதிவிட்டுள்ளார் .

“என்னுடைய திருமணம் பற்றி தவறான செய்திகள் ஊடகங்களில் கட்டுரைகள் மூலம் பரப்பப்படுவது ஆச்சர்யமாக உள்ளது. இது சரியில்லை. இது என்னுடைய சொந்த வாழ்க்கை, என் திருமணம் பற்றி நானே அதிகாரபூர்வமாக விரைவில் அறிவிப்பேன்” என அவர் கூறியுள்ளார்.

Related Articles

Close