கோலிவுட் செய்திகள்முன்னோட்டம்லேட்டஸ்ட்

தலைகீழாக நின்று சிரசாசனம் செய்த அமலாபால்

தமிழில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் அமலாபால், அருகில் உள்ள பூங்காவிற்கு சென்று தலைகீழாக நின்று சிரசாசனம் செய்திருக்கிறார். #Amalapaul #Yoga

தமிழ், மலையாளம் உள்பட ஏராளமான தென்னிந்திய மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அமலாபால். டைரக்டர் விஜய்யை திருமணம் செய்த அமலாபால் சில ஆண்டுகளில் அவரை விவாகரத்து செய்தார். அதன் பிறகு மீண்டும் நடிப்பில் தீவிர கவனம் செலுத்தினார்.
அதோடு உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்தார். உடலை சிலிம்மாக வைக்க யோகாசனமும் கற்று வந்தார். தனியாக யோகாசன ஆசிரியர் வைத்து படப்பிடிப்பு இல்லாத நாட்களில் யோகா பயின்று வந்தார்.
இந்த நிலையில் நடிகை அமலாபால் ஒரு பூங்காவில் தலைகீழாக நின்று சிரசாசனம் செய்யும் போட்டோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த போட்டோவை பார்த்தவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினார்கள். மேலும் அமலாபால் சிரசாசனம் செய்யும் போட்டோ வேகமாக வலைத்தளங்களில் பரவியது. இது தொடர்பாக அமலாபால் பதிவு செய்துள்ள கருத்தில் கூறி இருப்பதாவது:-
யோகாசனம் செய்வதில் எனக்கு அதிக ஆர்வம் உண்டு. சிரசாசனம் செய்வது பற்றி எனது யோகா குரு சொல்லிக் கொடுத்தார். ஆனால் அந்த ஆசனத்தை எனது குரு அல்லது மற்றவர் உதவியுடன்தான் என்னால் செய்ய முடிந்தது.
வீட்டில் தனியாக செய்தபோது அடிக்கடி கீழே விழுந்தேன். எனவே சிரசாசனத்தை இயற்கை சூழலில் தனியாக செய்து பார்க்க முடிவு செய்தேன். இதற்காக அருகில் உள்ள பூங்காவுக்கு சென்றேன். அங்குள்ள மரங்களின் அருகே நான், சிரசாசனம் செய்ய முயன்றபோது யாருடைய உதவியும் இல்லாமல் அதனை செய்ய முடிந்தது. இது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. நான், குழந்தையைபோல பூங்காவை சுற்றி வந்தேன். எனது சந்தோ‌ஷத்தை அங்கும்மிங்கும் ஓடி வெளிப்படுத்தினேன் என்று கூறி உள்ளார்.
அமலாபாலின் சிரசாசனத்திற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.Related Articles

Close