கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

தர்பார் தமிழகம் தாண்டி மற்ற மாநிலத்தில் எத்தனை கோடி வசூல் தெரியுமா?

தர்பார் உலகம் முழுவதும் கடந்த வாரம் பிரமாண்டமாக வெளிவந்தது. இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகின்றது. இதனால், தர்பார் படம் உலகம் முழுவதுமே நல்ல வசூல் தற்போது வரை வந்துக்கொண்டு தான் உள்ளதாம்.

இந்நிலையில் தர்பார் படம் தற்போது வரை ரூ 200 கோடி வசூல் செய்துள்ளதாக நாமே முன்பு தெரிவித்து இருந்தோம். அதோடு தர்பார் தமிழகத்தில் நேற்று மட்டுமே ரூ 10 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.மேலும், தமிழகத்தில் மட்டும் தர்பார் ரூ 65 கோடிகளுக்கு மேல் இதுவரை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது. இவை அதிகாரப்பூர்வம் இல்லை, ஆனால், கடந்த 7 நாட்களுமே படத்திற்கு நல்ல கலேக்‌ஷன் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமின்றி தர்பார் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ 16 கோடி, கர்நாடகாவில் ரூ 16 கோடி, கேரளாவில் ரூ 7.5 கோடி முறையே வசூல் செய்துள்ளது. வட இந்தியாவில் தர்பார் ரூ 5 கோடி வரை வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கணித்துள்ளது.

Tags

Related Articles

Close