கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

தமிழ் படத்தை தயாரிக்கும் அனுராக் காஷ்யூப், ரசிகர்கள் உற்சாகம்

அனுராக் காஷ்யூப் இந்திய சினிமாவின் தரமான இயக்குனர்களில் ஒருவர். இவர் இயக்கத்தில் வரும் படங்கள் அனைத்துமே விமர்சனங்கள் ரீதியாக மிகவும் வரவேற்பு பெறும்.

இந்நிலையில் அனுராக் முதன் முறையாக தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்துள்ளார், இப்படத்தின் டீசர் சமீபத்தில் வந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.இதை தொடர்ந்து அகிம்சா புரடக்‌‌ஷன் சார்பில் அனுராக் காஷ்யப் மற்றும் நிருபமா இணை தயாரிப்பில் உருவாகி இருக்கிறது இந்த ஜல்லிக்கட்டு படம்.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தன்னெழுச்சியாக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டம். உலக அளவில் பரபரப்பாக்கிய இந்த போராட்ட காட்சிகளை அப்படியே படம் பிடித்து போராட்டத்தின் பின்னணி, கலந்துகொண்டவர்கள் அதற்காக கூறும் காரணங்கள், உலக அளவில் நடந்த போராட்ட வடிவங்கள் ஆகியவையையும் சேர்த்து ஒரு படமாக மாற்றி இருக்கிறார்கள்.இப்படத்தை சந்தோஷ் புதிய கோணத்தில் இயக்க, ரமேஷ்வினாயகம் இசைமைக்கின்றார்.

Related Articles

சினி உலகம்

CINENxT


This will close in 15 seconds

Close