கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

தனுஷுடன் தொடர்ந்து பணியாற்றுவது ஏன்? வெற்றிமாறனே சொல்கிறார்

தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணிக்கு என்று மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. பலரும் இவர்கள் கூட்டணியில் இன்னும் 10 படம் வந்தாலும் பார்க்க தயாராகவுள்ளனர்.
சமீபத்தில் வந்த அசுரன் கூட வசூல் வேட்டை நடத்தி வருகின்றது, அப்படியிருக்க தொடர்ந்து தனுஷுடன் பணியாற்றுவது ஏன்? என்று வெற்றிமாறனிடம் ஒரு பேட்டியில் கேட்டுள்ளனர்.

அதற்கு வெற்றிமாறன் ‘தனுஷை எனக்கு அது ஒரு கனாக்காலம் முதல் தற்போது வரை 15 வருடம் தெரியும்.
அவரிடம் ஒரு போட்டி மனப்பான்மை இருக்கும், அதாவது ஒரு கதாபாத்திரத்தை தன்னால் செய்ய முடியுமா? என்று அவரே ஒரு சவாலாக எடுத்துக்கொள்வார்.

அப்படி அவர் சவாலாக எடுத்து செய்தது தான் அசுரனும், அவருடன் பணியாற்றுவது எனக்கும் மிக எளிது’ என்று கூறியுள்ளார்.

Related Articles

Close