Bigg Boss Tamil Season 3லேட்டஸ்ட்

தனது வாழ்வில் நடந்த துயர சம்பவம்! பிக்பாஸில் கமலிடம் கூறி வருத்தப்பட்ட லொஸ்லியா, கண்கலங்கிய அரங்கம்

பிக்பாஸில்  கமல் போட்டியாளர்களுடன் பெரிய திரை மூலம் பேசினார். போட்டியாளர்களின் தவறுகளை சுட்டி காட்டிய அவர் கடந்த வாரம் வெளியேறிய பாத்திமா பாபு சொன்னதை அடுத்து கமல் கேட்டு கொண்டதன் பேரில் லொஸ்லியா தனது வாழ்வில் நடந்த துயர சம்பவத்தை பகிர்ந்து கொண்டார்.

மைனம்மா கதை என்ற பெயரில் லொஸ்லியா சொன்ன கதையில், அவர் சிறுவயதில் அக்காவுடன் விளையாடி கொண்டிருந்த போது, ஒருவர் மைனா குஞ்சு வளர்ப்பதை பார்த்து ஆசைப்பட்டு, மைனா குஞ்சை பார்க்க சென்றாராம். குட்டியாக ரெக்கை கூட முளைக்காத மைனா குஞ்சை முதலில் கையில் வாங்குபவர் மீதே அது பாசமாக இருக்கும் என்ற போது அதனை லொஸ்லியாவின் அக்கா வாங்கிக் கொண்டாராம்.



ஆனால், அந்த மைனா குஞ்சுக்கு லொஸ்லியா மீது அப்படி ஒரு பாசமாம். லொஸ்லியா பள்ளிக்குச் சென்றாலும், எங்கு சென்றாலும் கூடவே பறந்து வருமாம். லொஸ்லியா அந்த மைனா குஞ்சை 6 வருடங்களாக ஒரு குழந்தை போல் வளர்த்தியிருக்கிறார். ஆனால், எதிர்ப்பாராத விதமாக லொஸ்லியாவின் வீட்டில் கட்டிடப்பணி நடந்ததால், அவர்கள் வேறு இடத்திற்கு சென்றுவிட்டார்கலாம்.

புதிய இடத்தை விரும்பாத மைனா, பழைய வீட்டிலேயே இருந்ததாம், பள்ளி முடிந்து வீடு வரும்போது எப்போதும் தனது மைனாவிற்கு சாப்பாடு கொடுத்துவிட்டு வருவாராம் லொஸ்லியா. ஒரு நாள் அப்படிச் சென்றபோது மைனாவை காணவில்லையாம். இதனால் கடும் கவலையில் இருந்த லொஸ்லியாவை அவரது தந்தை, மைனா பறந்து போயிருக்கும் என சமாதானம் செய்தாராம்.



ஆனால் இரட்னு நாட்களுக்கு பிறகு தான் பக்கத்து வீட்டில் இருக்கும் புத்தி சுவாதினம் இல்லாத சிறுவன், மைனா கொத்தும் என்பதால் இரும்பு கம்பியால் அடித்ததில், மைனா இறந்துவிட்டதாம். இது தனது வாழ்வில் நேர்ந்த மிகப்பெரிய இழப்பு என்று லொஸ்லியா பகிர்ந்து கொண்டார்.

Tags

Related Articles

Close