கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

ஜாதி வெறியோடு பேசிய வெற்றிமாறன்? சர்ச்சைக்கு விளக்கம்

பொன்பரப்பி ஜாதி பிரச்சனை காரணமாக பெரிய மோதல் ஏற்பட்டது தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் ஜாதி வெறியுடன் முகநூலில் பதிவிட்டதாக கூறி ஒரு பதிவு உலா வருகிறது.

“சாதிவெறியர்களே உங்களுக்கெல்லாம் நான் ஒன்னு சொல்லிக்கிறேன்! நீங்க பஸ்ல போறீங்களா? அந்த பஸ் டிரைவரோ , கண்டக்டரோ பறையனா இருக்கப் போறான் பார்த்துக்கோங்க. என்னது உங்கப்பாவுக்கு ஹார்ட் ஆபரேசன் இரத்தம் வேனுமா? வேணான்டா கீழ் சாதிக்காரன் இரத்தம் ஏதாவது ஏத்திட போறான் அந்த டாக்டரு ! அப்படியே அந்த டாக்டரயும் என்ன சாதினு கேட்டுக்க!” என துவங்கி ஒரு பெரிய பதிவாக நீள்கிறது அது.

இதில் வெற்றிமாறன் பேச்சில் தான் அதிகம் ஜாதி வெறி இருக்கிறது என சிலர் குற்றம்சாட்டி விமர்சித்தனர். மேலும் அவர் ஒருமையில் பேசியிருந்ததுவும் கண்டனத்திற்கு உள்ளானது.

இந்நிலையில் இது பற்றி விளக்கம் அளித்துள்ள வெற்றிமாறன், “ஃபேஸ்புக்கில் நான் எதுவும் பதிவிடவில்லை. நான் யாருக்கும் பேட்டியும் கொடுக்கவில்லை. அப்பதிவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. அப்பதிவின் கருத்துகளோடு நான் ஒத்துப் போனாலும், அதை தெரிவித்திருக்கிற விதத்தில் நான் உடன்படவில்லை” என கூறியுள்ளார்.

Related Articles

Close