படம் எப்படிலேட்டஸ்ட்

ஜருகண்டி திரைவிமர்சனம்

கதைக்களம்

ஜெய் ஒரு லோயர் மிடில் கிளாஸ் ஃபேமிலியை சேர்ந்தவர். அவருக்கு அம்மா, தங்கை என சின்ன குடும்பம். அவரின் உற்ற நண்பராக பிக்பாஸ் டேனியல். சொந்தமாக தொழில் தொடங்குவதற்கான முயற்சியில் இறங்குகிறார்கள். ஆனால் எதிர்பாராத சிக்கல் வந்து முழிக்கும் நேரத்தில் ஹீரோயினை ஜெய் சந்திக்க அவருக்கும் ஒரு பிரச்சனை. அதன் பின்னால் பெரிய ஒரு சதி நடக்கிறது.

ஜெய் தனக்கான சிக்கலில் இருந்த மீண்டாரா இல்லை ஹீரோயினை பிரச்சனையில் இருந்து காப்பாற்றினாரா? சதிகாரர்கள் யார் என்ன ஆனார்கள் என்பதே கதை.


படத்தை பற்றிய அலசல்

ஹூரோ ஜெய்க்கு எப்போதும் லவ் ஸ்ட்டோரி நன்றாக ஒர்க்கவுட் ஆகும். ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பும் இருக்கிறது. ஆனால் இப்படத்தில் அவருக்கு பெரிதளவில் லவ் ஃபிளாஸ் பேக் எல்லாம் இல்லை. சொல்லப்போனால் அவருக்கான கதையா இது என கேள்வி எழுகிறது.

படத்தில் ஹீரோயின் மலையாளத்தில் 2 படத்தில் நடித்து தற்போது தமிழில் அறிமுகமாகியிருக்கிறார். படத்தில் அவர் சிம்பிளாக இருந்தாலும் அவரின் பின்னணியில் பிரச்சனை மிகவும் சீரியஸான ஒன்று.

பிக்பாஸ் டேனி இதில் ஜெய்யுடன் கதை முழுக்க பயணம் செய்கிறார். அவருக்கென வழக்கம் போல இருக்கும் லோக்கல் ஸ்லாங் ஓகே. ஆனால் இங்கே அவரின் பெர்ஃபார்மன்ஸ் குறைகிற மாதிரியான ஒரூ ஃபீல்.

ரோபோ சங்கர் தான் காமெடியின் முக்கிய புள்ளி. அவர் அவருடைய ஸ்டைலில் இங்கே விளையாடுகிறார். படத்தின் சுவாரசியம் குறையும் நேரத்தில் ரோபோவின் காமெடி தான் கொஞ்சம் இண்ட்ரஸ்டிங்.


இதுபோக படத்தில் பிரபல நடிகர் போஸ் வெங்கட்க்கு போலிஸ் ரோல். கிரிமினல் போலிஸ் போல இருக்கும் அவரையே ஒரு கட்டத்தில் வேற மாதிரி மாற்றி விடுகிறார்கள்.

இயக்குனர் பிச்சுமணியின் கதையில் இரண்டாம் பாதியின் சில நிமிடங்களே பார்ப்போரை ஈர்க்கும் என தோன்றுகிறது. ஆனால் பெண்கள் கடத்தல் பற்றி சமூக நலம் சார்ந்த விசயத்தை எடுத்து வைத்துள்ளார். இன்னும் கதையை ஷார்ப் ஆக்கியிருக்கலாம்.

படத்தில் பின்னணி இசை ஓகே. பாடல்கள் ஓரிரு பாடல்கள் தான். ஆனால் மனதில் நிற்குமா என்றால் கொஞ்சம் டவுட்.

கிளாப்ஸ்

காமெடி ரோல் ரோபோ சங்கர் கடைசி வரை சிரிக்க வைக்கிறார்.

இசையமைப்பாளரின் பின்னணி இசை ஆக்‌ஷன் ரகம்.

பல்ப்ஸ்

ஜெய் இன்னும் நல்ல கதைகளை தேர்ந்தெடுக்கலாம்.

கதைக்குள் கதை என ஒரே வலை பின்னல்.

மொத்தத்தில் ஜருகண்டி சிம்பிள் ஸ்டோரி வண்டி.

Related Articles

Close