கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தில் லிங்கா

சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தில் லிங்கா

லிங்கா
பெண்குயின், சிந்துபாத் மற்றும் சேதுபதி படங்களில் நடித்தவர் லிங்கா. இவர் நடிப்பில் தற்போது தடயம் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை மணி கார்த்திக் இயக்கியுள்ளார்.

 இப்படம் குறித்து மணி கார்த்திக் கூறும் போது, ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் சுமார் 7 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். திரைத்துரையால் ஈர்க்கப்பட்டு  இயக்குனராக முயற்சி செய்து வருகிறேன். சில குறும்படங்கள் இயக்கி முடித்த பின்னர் தனித்தன்மை கொண்ட சுவாரஸ்யமான திரைக்கதை  ஒன்றைச் செய்யத் திட்டமிட்டு, தற்போது ‘தடயம்: முதல் அத்தியாயம்’ என்ற படத்தை எழுதி இயக்கி இருக்கிறேன்.
லிங்கா
 தடயம் முதல் அத்தியாயம் உளவியல் குற்றங்களை பின்னனியியாக வைத்து அமைக்கப்பட்ட ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர். போலீஸ் அதிகாரியாக வரும் லிங்காவைச் சுற்றி நடக்கும் தொடர் கொலைகள் அதில் கிடைக்கும் திடுக்கிடும்  தடயங்கள் அவரை மேலும் முன்னோக்கி நகர்த்த அதில் அவர் சந்திக்கும் இன்னல்கள், இறுதியில் எதிரியின் சதியை முறியடித்தாரா என்று முதல் அத்தியாயம் தொடர்கிறது.
  தடயம் முதல் அத்தியாயம் விறுவிறுப்பான ஒரு சஸ்பன்ஸ் திரில்லராக ரசிகர்கள் மத்தியில் வலம் வரும் என்பதில் எங்கள் படக்குழு நன்னம்பிக்கை கொண்டுள்ளோம் என்றார்.

Related Articles

Close