கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

சூர்யா ஜோடியாகும் சாயிஷா சய்கல்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் சூர்யாவின் 37-வது படத்தில், சூர்யா ஜோடியாக நடிக்க சாயிஷா சய்கலுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. #Suriya37

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் `என்ஜிகே.’, படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சூர்யா அடுத்ததாக கே.வி.ஆனந்த்துடன் இணையவிருக்கிறார்.இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சூர்யா ஜோடியாக நடிக்க, சாயிஷா சய்கலுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படம் பயணம் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகிறது. நியூயார்க், பிரேசில், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆண்டனி படத்தொகுப்பு பணிகளையும், கேவ்மிக் யு அரி ஒளிப்பதிவு பணிகளையும் மேற்கொள்கின்றனர். #Suriya37Related Articles

Close