கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

சூர்யாவின் NGK படத்தில் இடம்பெறுகின்ற மற்றொரு பாடல்! படக்குழு அறிவிப்பு

சூர்யாவின் நடிப்பில் இம்மாத இறுதியில் 31ஆம் தேதி NGK படம் வெளியாகவுள்ளது. செல்வராகவன் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக படப்பிடிப்பு வேலைகளில் இப்படம் இருந்ததால் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

பாடல்கள், ட்ரைலர் என அனைத்தும் வெளியாகி படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் இந்நேரத்தில் இப்படத்தில் முக்கியமான காட்சி ஒன்றிற்காக இன்னொரு பாடல் சேர்க்கப்படவுள்ளதாம். இந்த தகவலை இப்பாடலை எழுதவுள்ள உமாதேவி என்பவர் வெளியிட்டுள்ளார்.

Related Articles

Close