கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

‘சூரரைப் போற்று’ – மீண்டும் ஓடிடி சர்ச்சை

‘இறுதிச் சுற்று’ படத்தை இயக்கிய சுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன்பாபு மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘சூரரைப் போற்று’. இப்படம் கடந்த மாதம் தணிக்கை செய்யப்பட்டு ‘யு’ சான்றிதழையும் பெற்றது. சூர்யா தயாரித்த ‘பொன்மகள் வந்தாள்’ படம் மே 29ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது. அதன் காரணமாக ‘சூரரைப் போற்று’ படத்தையும் ஓடிடியில்தான் வெளியிடுவார்கள் என அப்போது ஒரு சர்ச்சை எழுந்தது. அதற்காக உடனடியாக ‘சூரரைப் போற்று’ படத்திற்கான தணிக்கையைப் பெற்றார்கள்.

கொரானோ தொற்றால் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத சூழலில் தணிக்கை பெற்றதும் ஆச்சரியமாக இருந்தது. இந்த வருடத்திற்குள்ளாக தியேட்டர்கள் திறக்க வாய்ப்பில்லை என்று சிலர் கொண்டிருக்கிறார்கள்.
ஹிந்தியில் அக்ஷய்குமார் நடித்துள்ள படம் உள்ளிட்ட 7 படங்கள் அடுத்து ஓடிடியில் வெளியாகின்றன. தமிழில் நேரடி ஓடிடிக்கு சூர்யா ஆதரவு தெரிவித்ததால் ‘சூரரைப் போற்று’ படத்தை எப்படியாவது ஓடிடியில் வெளியிட மீண்டும் பேச்சு வார்த்தை நடப்பதாக ஒரு பரபரப்பை டோலிவுட்டில் ஏற்படுத்தியுள்ளனர்.

‘சூரரைப் போற்று’ படத்தின் சாட்டிலைட் உரிமை ஏற்கெனவே பெரிய விலைக்கு விற்றுள்ளார்கள். தயாரிப்பு நிறுவனத் தரப்பில் படத்தை தியேட்டரில்தான் வெளியிடப் போகிறோம் என தெரிவித்துள்ளார்களாம். இந்நிலையில் மீண்டும் இந்த சர்ச்சை எழ என்ன காரணம் எனத் தெரியவில்லை.
Related Articles

Close