தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் அழகான மகளை பார்த்திருக்கிறீர்களா? உங்களுக்காக இங்கே

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் மகேஷ் பாபு. இவருக்கும் பல தீவிர ரசிகர்கள் இருக்கிறார்கள். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான பாரத் அனே நேனு படம் வெற்றி பெற்றது.


இதில் அவர் முதலமைச்சராக நடித்திருந்தார். தமிழிலும் இப்படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. பல ஹிட் படங்களை கொடுத்தவர் இன்னும் இரு வருடங்களுக்கு படங்களை கையில் வைத்திருக்கிறார்.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு வந்தவர் நம்ரதா என்பவரை 2005 ல் திருமணம் செய்துகொண்டார். இவருக்கு சிதா என்னும் பெண் குழந்தை இருக்கிறது. அக்குழந்தைக்கு தற்போது 6 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளது.


சமூக வலைதளங்களில் புகைப்படத்தை மகேஷ் பாபுவே வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Close